அவசர காலச் சட்டமூலத்திற்கு எதிராக மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வாக்களிக்கும் என முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் இன்று மாலை சந்திப்பொன்று இடம்பெற்றது.
அதன்போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், எந்தவொரு அமைச்சுப் பதவிகளையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்காது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment