“கோட்டா வீடு செல்லும்வரை நாங்கள் வீடு செல்லமாட்டோம்”- தொடரும் போராட்டம்!

ஜனாதிபதியை பதவி விலகக்கோரியும் அரசுக்கு எதிராகவும் காலிமுகத்திடலில் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றும் தொடர்ந்து வருகிறது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு பல்வேறு சமூக ஆர்வலர்களும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர்.

மேலும், இன்றிரவும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதற்கு போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர். அதற்கமைய இன்றிரவு உணவுகளை தயாரிப்பதற்கும் சிலர் காலிமுகத்திடலில் தயாராகிவருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகி வீடு செல்லும் வரை நாங்களும் வீடு செல்லப்போவதில்லை என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று வருபவர்கள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.