பிரதமரின் உடல்நிலை குறித்த உண்மைத் தகவல் வெளியானது….!

தான் மிகவும் நலமாக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் ஒருங்கிணைக்கப்பட்ட குழுக்களினால் பரப்பப்படும் இவ்வாறான தகவல்களில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், நோயாளியொருவரைப் பார்ப்பதற்குக் கூட தான் அண்மையில் வைத்தியசாலைக்குச் செல்லவில்லை என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தான் தொடர்ந்து உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதுடன் சிறந்த தேகாரோக்கியத்துடன் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வெளியான தகவல் போலியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.