கொழும்பின் பல வீதிகளில் போக்குவரத்து தடை - பொலிஸாரின் அறிவிப்பு

ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் அனைத்து வீதிகளிலும் பொலிஸாரினால் வீதித்தடைகளை பயன்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர்.

குறித்த பகுதியில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் ஏனைய இடங்களில் பணிபுரிபவர்கள் வாகனங்களை சோதனையிட்ட பின்னரே வீதிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், லேக் ஹவுஸ் முன்றலில் உள்ள நெலும் மாவத்தை பகுதி போக்குவரத்துக்காக முற்றாக மூடப்பட்டுள்ளது. 

தற்போது கலதாரி ஹோட்டலுக்கு அருகாமையில் பொலிஸார் வீதித் தடைகளை பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் இன்று கொழும்பில் இடம்பெறவுள்ள நிலையில் வீதிகளில் மறியல் போடப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.