எரிபொருள் விலை தொடர்பில் அமைச்சரின் விஷேட அறிவிப்பு

எரிபொருள் விலையில் திருத்தம் எதிர்காலத்தில் விலை சூத்திரத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

டொலருக்கு நிகரான எரிபொருள் விலையினால் அரசாங்கம் தற்போது நட்டத்தை எதிர்நோக்குவதாக தெரிவித்தார்.

விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், நிதியமைச்சினால் விதிக்கப்படும் வரிகள் நீங்கலாக 92 ஒக்டோன் பெற்றோலினால் 13.38 ரூபா நட்டம் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பெட்ரோல் 95 ஒக்டோன் பெற்றோலினால் 3.28 ரூபா, லங்கா ஆட்டோ டீசலினால் 68.79 ரூபா, லங்கா சுப்பர் டீசலினால் 67.46 ரூபா மற்றும் மண்ணெண்ணெய்யினால் 232.33 ரூபாவும் நட்டம் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.