வரிசையில் பறிபோன மற்றொரு உயிர்!

வடக்கு களுத்துறை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வரிசையில் நின்ற நபர் ஒருவர் இன்று மதியம் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் களுத்துறை தெற்கு, மஹா ஹீனடியங்கல பகுதியைச் சேர்ந்த 63 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் இன்று காலை 7 மணியளவில் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக இவ்வாறு வரிசையில் நின்றுள்ளார்.

இன்று மதியம் 1 மணியளவில் குறித்த நபர் மயங்கி விழுந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வைத்தியசாலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.