றம்புக்கனை காவல்துறை பிாிவுக்கு உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு

றம்புக்கனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு உடன் அமுலாகும் வகையில் மறு அறிவித்தல் வரை காவல்துறை ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ள அறிவித்தல் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டடுள்ளது.

இந்த காவல்துறை ஊரடங்கை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளில் வசிப்பவர்களை வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ள காவல்துறை பேச்சாளர், றம்புக்கனை பகுதியினூடாக பயணிப்பவர்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரியுள்ளார்.

இதேவேளை, இன்று காலை முதல் ரம்புக்கனை புகையிரத கடவைக்கு இடையூறு விளைவித்த ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கே காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு காவல்துறையினர் எச்சரித்துள்ள போதிலும், அவர்கள் அதனை பொருட்படுத்தியிருக்கவில்லை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் கூறுகிறார்.

தொடருந்து கடவையின் ஊடாகச் சென்ற எரிபொருள் தாங்கிக்கு தீ வைக்க போராட்டக்காரர்கள் முயற்சித்துள்ளதாகவும் அதனை கட்டுப்படுத்த போராட்டக்காரர்கள் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டதாக அவர் கூறுகிறார்.

மேலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் முச்சக்கரவண்டிக்கு தீவைத்துள்ளதாகவும், உடமைகளுக்கு சேதம் விளைவித்ததாகவும் அவர் கூறினார். போராட்டக்காரர்கள் காவல்துறையினரை நோக்கி தாக்குதல்களை ஆரம்பித்ததாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நிலைமை மோசமடைந்ததால், அதைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்தது, மேலும் துப்பாக்கிச் சூடு காரணமாக பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்தில் காவல்துறையைச் சேர்ந்த 10 உத்தியோகத்தர்களும் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.