முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ தனது அதிகாரத்தை பாதுகாப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை பணத்திற்கு வாங்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
அதிகாரத்தை விலைக்கொடுத்து வாங்கும்போது மலிவானதாகிவிடுகிறது. எனவே, உடனடியாக இச்செயலை நிறுத்துமாறு பசில் ராஜபக்ஷவை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது ட்விட்டர் தளத்தில் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் விற்பனைக்கு இல்லை எனவும், நீங்கள் மற்றவர்களை வாங்க முடிந்தால், எச்சரிக்கையாக இருங்கள் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தனது பதவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு முன்னாள் நிதியமைச்சர் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்றைய ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment