நிதி அமைச்சர் அலி சப்ரி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

அடுத்த ஆறு மாதங்களுக்குள் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவி தேவைப்படும் என நிதியமைச்சர் அலி சப்ரி வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

கடுமையான பொருளாதார நெருக்கடியை நிர்வகிப்பதற்கு எரிபொருள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பெற்றுக்கொள்ள இந்த நிதி அவசியம் என கூறியுள்ளார்.

எரிபொருளுக்காக இந்தியாவிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டொலர் கடனை இலங்கை நாடும் என்றும் இது சுமார் 5 வார தேவைகளுக்கு போதுமானதாக இருக்கும் என்று சப்ரி கூறியுள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் சீனா, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்டவர்களின் ஆதரவையும் அரசாங்கம் கோரும் என நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரச நிதியை சரிசெய்யும் முயற்சியில், நாடு அடுத்த ஆறு மாதங்களுக்குள் வரி விகிதங்களை உயர்த்தி எரிபொருள் விலையை மேலும் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.