நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு காரணமான அரசியல்வாதிகளை பதவிவிலக கோரி காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம் தற்போது வரையில் தொடர்ந்தும் முன்னெடுக்கபட்டுள்ளது.
மக்களின் தன்னெழுச்சி போராட்டம் நேற்று பிற்பகல் காலிமுகத்திடலில் ஆரம்ப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலக வளாகம் ஆகியவற்றில் தொடர்ந்தும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
கொழும்பில் இன்று அதிகாலையில் கடும் மழை பெய்துவரும் நிலையிலும், இளைஞர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஜனாதிபதி செயலக வளாகத்தில் தொடர்ந்தும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், போராட்டத்தை கைவிடாது கோசங்களை எழுப்பியவண்ணம் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
Post a Comment