என்னை பதவி விலகுமாறு ஜனாதிபதி ஒருபோதும் கூறவில்லை. அவ்வாறு கூறவும் மாட்டார் என்றும் நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (27) அலரிமாளிகையில் பிரதேச சபைத் தவிசாளர்கள், நகரசபைத் தலைவர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு வெளிநாட்டு உதவிகளைப் பெற்றேனும் தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
இதேவேளை, இந்த சந்திப்பின்போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியிலிருந்து விலகக் கூடாது என உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியிருந்தனர்.
இந்த சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட பிரதமர் மஹிந்த, இந்த நெருக்கடியிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தற்போது எமக்கு உள்ளது. எனவே அதற்காக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
அனைத்து வகையிலும் வீழ்ச்சியடைந்த ஒரு நாட்டையே நாங்கள் பொறுப்பேற்றோம். அப்போது பொருளாதாரத்தில் மட்டுமல்ல தேசிய பாதுகாப்பிலும் மக்களுக்கு நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.
Post a Comment