ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகமாட்டார் என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இன்று மீண்டும் சபையில் அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று ஜே.வி.பியின் தலைவர் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
''ஜே.வி.பி. வன்முறையை தூண்டுகின்றது.அக்கட்சியினருக்கு வரிசையை காண்பதுதான் மகிழ்ச்சி. 71 மற்றும் 88 காலப்பகுதியிலும் அவ்வாறுதான் செயற்பட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். அவ்வாறானதொரு நிலைமைக்கு இடமளிக்க வேண்டாம்.
நாம் ஜனநாயகத்தை மதிக்கின்றோம். அரசமைப்புக்கு அப்பால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தோற்கடிக்கப்படும். ஜனாதிபதி பதவி விலகமாட்டார்.” – என்றார்.
Post a Comment