ரம்புக்கனை துப்பாக்கிச்சூடு தொடர்பில் சர்வதேசத்திலிருந்து வெளியான பல உருக்கமான கருத்துக்கள்

இரம்புக்கனையில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் முழுமையான மற்றும் வௌிப்படையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie Chung அழைப்பு விடுத்துள்ளார்.

ரம்புக்கனையில் இருந்து வெளியாகும் செய்தியால் தான் மிகவும் வருத்தமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்க தூதுவர், அமைதியான போராட்டத்திற்கான மக்களின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை ரம்புக்கனையில் போராட்டக்காரர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆழ்ந்த கவலை அடைவதாகவும் எந்தவொரு தரப்பினரின் வன்முறையும் அமைதியான போராட்டக்காரர்களின் உரிமைகளைத் தடுக்கிறது என தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.

இரம்புக்கனை சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பில் தாம் கவலையடைவதாக இலங்கை மற்றும் மலேசிய நாடுகளுக்கான கனெடிய தூதுவர் David McKinnon குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தில் வன்முறைக்கு காரணமானவர்கள் பொறுப்பு கூறலுக்கு உட்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தும் விடயத்தில், அதிகப்பட்ச விதிகள் அமுல்ப்படுத்தப்பட வேண்டுமெனவும் இலங்கை மற்றும் மலேசிய நாடுகளுக்கான கனெடிய தூதுவர் David McKinnon குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.