ஹஜ் புனித யாத்திரை தொடர்பில் சவுதி அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

கொவிட்-19 காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக காணப்பட்ட தடைகளை தளர்த்தி ஹஜ் புனித யாத்திரைக்கு ஒரு மில்லியன் யாத்திரிகர்களை அனுமதிப்பதற்கு சவுதி அரேபியா தீர்மானித்துள்ளது.

எனினும் மக்கா - ஹஜ் புனித யாத்திரை வருபவர்கள் 65 வயதுக்கு குறைந்தவர்களாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் கொவிட்-19 முழுமையான தடுப்பூசி பெற்றிருத்தல் வேண்டும் எனவும் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு யாத்திரிகர்களுக்கும் அனுமதி வழங்கப்படுவதோடு, அவர்கள் அண்மையில் பெறப்பட்ட கொவிட்-19 பரிசோதனை அறிக்கையை வைத்திருத்தல் வேண்டும் எனவும் சவுதி அரேபியா அரசாங்கம் அறிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.