அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு - காலி முகத்திடல் மாபெரும் ஆர்ப்பாட்டம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கட்டியை அடுத்து நாடளாவிய ரீதியில் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் எழுச்சிப் போராட்டம் நாட்டில் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்ற நிலையில், ஜனாதிபதி ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவிவிலகுமாறு கோரி உலக நாடுகளிலும் இலங்கையர்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை நாட்டின் அனைத்துபாகங்களிலும் இருந்து வந்த மக்கள் கூட்டம் கொழும்பு காலிமுகத்திடலில் பெரும் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, இன்று அச்சக தொழிற்துறையினரும் தங்களது எதிர்ப்பை வெளியிட்டு காலிமுகத்திடல் பகுதியில் அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.