எரிபொருள் விலை அதிகரிப்பு – பல பகுதிகளில் இன்றும் போராட்டம்

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் எரிபொருள் கோரியும், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாட்டின் பல பகுதிகளில் இன்றும் காலை முதல் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்கமைய பதுளை - பசறை பிரதான வீதியின் யூரி தோட்டப் பகுதியில் பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பலப்பிட்டிய நகர் பகுதியில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு - காலி வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதேவேளை, பொரலந்தை, வெலிமடை, ரெந்தபோல மற்றும் பூனாகலை தோட்டப் பகுதிகளில் இன்று காலை தோட்ட மக்களால் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

உடபுஸ்ஸலாவை - எம்.எஸ் தோட்டம் - கோல்டன் பகுதியில் தோட்ட மக்களால் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படுகிறது.

திருகோணமலை - கண்டி பிரதான வீதியின் அபயபுர சுற்று வட்ட சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படுகிறது.

திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் பேரூந்து ஒன்றினை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளனர்.

குறித்த பகுதியில் வாகன சில்லுகள் எரிக்கப்பட்டு ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நுவரெலியா, பதுளை உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான தோட்ட மக்கள் பணிப்புறக்கணிப்பில் மேற்கொள்ளப்படுகிறது.

வலஸ்முல்ல, நெலுவ, இராஜாங்கணை உள்ளிட்ட இடங்களிலும் இன்று காலை முதல் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ராஜாங்கணையில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு - புத்தளம் பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதேவேளை, கண்டி, நுவரெலியா, மாத்தளை, இரத்தினபுரி, ஹட்டன், தோப்புவ, சிலாபம், கேகாலை, கம்புறுபிட்டி, அக்குரஸ்ஸ, அம்பலாங்கொடை, எல்பிட்டி, அநுராதப்புரம், மினுவாங்கொடை, கெஸ்பேவ, திஸ்ஸமஹாராம உள்ளிட்ட நகரங்களில் நேற்றும் இன்றும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை, காலி முகத்திடலில் கடந்த 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

நேற்றிரவு கலைஞர்கள் உள்ளிட்ட பலர் குறித்த பகுதியில் கூடி போராட்டத்திற்கு ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்தநிலையில், குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாட்டின் பல பகுதிளிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.