ரம்புக்கனை சம்பவம் – பொலிஸ்மா அதிபர் விடுத்த அறிவிப்பு

ரம்புக்களை பகுதியில் எரிபொருள் கொள்கலன் ஒன்றுக்கு தீவைக்க ஒரு தரப்பு முயற்சித்ததாகவும் அதனை தடுப்பதற்காகவே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் பொலிஸ்மா அதிபர் சீ. டீ. விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

30 ஆயிரம் லீட்டர் எரிபொருள் குறித்த கொள்கலனில் இருந்ததாகவும், தீமூட்டப்பட்டிருந்தால் பாரிய அழிவு இடம்பெற்றிருக்கும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், அழிவுகளை தடுக்கவே குறைந்த அளவிலான அதிகாரம் பாவிக்கப்பட்டு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் சீ. டீ. விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.