ஆர்ப்பாட்டக்காரர்கள் - காவல்துறையினர் மோதல்: துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி: பலர் காயம்

றம்புக்கனையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே இடம்பெற்ற மோதலில், ஒருவர் பலியாகியுள்ளார்.

இந்த மோதலில் 10 பேர் காயமடைந்த நிலையில், கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக, கேகாலை வைத்தியசாலை பணிப்பாளர் எமது  உறுதிப்படுத்தியுள்ளார்.

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டி - கொழும்பு தொடருந்து மார்கத்தை ரம்புக்கனை பகுதியில் மறித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க ரம்புக்கனை காவல்துறை கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர்.

இதேவேளை, ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது,  பின்னர் தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்டதாகவும் அங்குள்ள செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை முதல் தடைப்பட்டுள்ள கொழும்பு - கண்டி தொடருந்து பாதையின் போக்குவரத்து இன்னும் சீரமைக்கப்படவில்லையென வும் அங்குள்ள செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.