சற்றுமுன்னர் மிரிஹான சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட ஊடக பேச்சாளர் வெளியிட்ட செய்தி…

மிரிஹானை போராட்டத்தின் காரணமாக 39 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் 53 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 18 விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உட்பட 24 காவல்துறையினர் காயமடைந்துள்ளதாகவும் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெறும் ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் பொதுக்கள் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் களுபோவில, ஸ்ரீஜயவர்தனபுர மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவங்கள் தொடர்பில் நேற்று கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக, பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) கீழ் சட்டநடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்றும், அதற்கு பதிலாக குற்றவியல் சட்டம் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைத்தமை தொடர்பான சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.