21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் - சபாநாயகர் அறிவிப்பு

21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கான சட்டமூலம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவினால் அண்மையில் சுயேட்சையாக மாறிய 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் குறித்த சட்டமூலம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

20 ஆவது திருத்தத்தை ரத்துச் செய்து 19 ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டு வருவதற்காக அரசியலமைப்பின் 21 ஆவது திருத்த சட்டமூலம் இவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பல யோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (22) பாராளுமன்ற அமர்வு ஆரம்பிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதற்கமைய, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயேட்சையாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பு திருத்த யோசனைகளை சமர்ப்பித்துள்ளனர்.

இது தொடர்பான அனைத்து முன்மொழிவுகளும் சட்டமா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வரப்படும் என சபாநாயகர் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.