எரிபொருள் விலை குறைக்கப்படுமா? CPC தலைவர் விளக்கம்!

எதிர்காலத்தில் மின்சார உற்பத்திக்கான எரிபொருளை தட்டுப்பாடு இன்றி விநியோகிக்க முடியும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், எரிசக்தி அமைச்சு, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், நிதியமைச்சு மற்றும் வங்கிகளின் பிரதிநிதிகளுடன் இன்று (25) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“நுகர்வோர் அன்றாட தேவைக்கு அதிகமாக அதிக எரிபொருளை பயன்படுத்துகின்றனர் என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். மின்சார சபைக்கு 2,000 மெற்றிக் தொன் டீசல் தேவைப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, இந்திய கடனின் கீழ் மற்றுமொரு எரிபொருள் கப்பலை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளோம். எனவே டீசல் தட்டுப்பாடு ஏற்படாது. நாளாந்தம் தேவையான எரிபொருளை மாத்திரம் பெற்றுக்கொள்வதில் மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை. அதன்படி மின்சாரத்திற்கு தேவையான எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுப்போம். நாளாந்தம் தேவையான எரிபொருளை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்.

கேள்வி – எரிபொருள் விலையில் மாற்றம் வருமா?​

“இல்லை, தற்போதைய சூழ்நிலையில், விலையில் விரைவான வீழ்ச்சியை எதிர்பார்ப்பது கடினம். உலக சந்தையில் விலை வீழ்ச்சி ஏற்பட்டால், அதைப் பற்றி யோசிப்போம். அந்த நிவாரணத்தை மக்களுக்கு எப்படி கொடுக்க முடியும் என்று.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.