எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு நிவாரணத் தொகையொன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
இதற்கமைய குடும்பமொன்றுக்கு 5 ஆயிரம் ரூபா எனும் அடிப்படையில் நிவாரணத் தொகை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரண்டு மாதங்களுக்கு இந்த நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், குறைந்த வருமானம் பெறும் 3 தசம் 1 மில்லியன் மக்களுக்கு குறித்த நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment