சவூதி எண்ணெய் ஆலைகள் மீது ஏவுகணைத் தாக்குதல்.

சவூதி அரேபியாவில் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்தி ஆலைகளைக் குறிவைத்து யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தினா்.

நேற்று (20) நடத்தப்பட்ட இத்தாக்குதல்களால் ஓரிடத்தில் மட்டும் எண்ணெய் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அராம்கோ எரிவாயு நிலையம், செங்கடல் துறைமுகத்தில் உள்ள பெட்ரோ கெமிக்கல் வளாகம், நாட்டின் தென்மேற்கில் உள்ள ஒரு மின் நிலையம், தெற்கு எல்லை நகரமான ஜிசனில் உள்ள எண்ணெய்க் கிடங்கு, தெற்கு நகரமான காமிஸ் முஷைட்டில் உள்ள எரிவாயு நிலையம் ஆகியவற்றில் யேமன் ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தினா்.

இத்தாக்குதல்களில் எண்ணெய் நிலையங்களில் சேதம் ஏற்படவில்லை என்றாலும் அருகில் குடியிருப்புகள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் சேதமடைந்தாக சவூதி தலைமையிலான இராணுவக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலால் செங்கடல் துறைமுகத்தில் உள்ள எண்ணெய் உற்பத்தி ஆலையில் மட்டும் உற்பத்தி பாதிக்கப்பட்டதாக சவூதி அரசு தெரிவித்துள்ளது. சவூதி மற்றும் சீனாவின் கூட்டு முதலீட்டில் செயல்படும் இந்த ஆலையில் நாள் ஒன்றுக்கு 4 இலட்சம் பீப்பாய் மசகு எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது.

யேமனில் அரசுக்கு எதிராகச் செயல்படும் ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கு எதிராக சவூதி அரேபியா தலைமையிலான இராணுவ கூட்டமைப்பு 2015-ஆம் ஆண்டுமுதல் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்குப் பதிலடியாக சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய்க் கிடங்குகள் உள்ளிட்ட அரசுக்குச் சொந்தமான இடங்களைக் குறிவைத்து ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் ரியாத்தில் வைத்து பேச்சுவாா்த்தை நடத்த ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கு வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் சில தினங்களுக்கு முன்னா் அழைப்பு விடுத்தது. ஆனால், இந்தப் பேச்சுவாா்த்தையை ஒரு நடுநிலையான நாட்டில் வைத்து நடத்த வேண்டும் என ஹூதி கிளா்ச்சியாளா்கள் கூறிவந்த நிலையில், இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.