நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஜனாதிபதி கோட்டாபய எடுத்துள்ள தீர்மானம்!

தேசிய பொருளாதார சபைக்கு உதவி புரியும் வகையில் ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவிற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

அந்தவகையில் குறித்த குழுவின் உறுப்பினர்களாக, பேராசிரியர் எச்.டி கருணாரத்ன, பேராசிரியர் ஷிரந்த ஹீன்கெந்த, கலாநிதி துஷ்னி வீரகோன், தம்மிக்க பெரேரா, கிரிஷான் பாலேந்திர, அஷ்ரப் உமர், கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, விஷ் கோவிந்தசாமி, எஸ்.ரங்கநாதன், ரஞ்சித் பேஜ், சுரேஷ் டி மெல், பிரபாத் சுபசிங்க, துமிந்த ஹுலங்கமுவ, சுஜீவ முதலிகே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெருநிலைப் பொருளாதாரக் கொள்கை, கொவிட் - 19 பெருந்தொற்று நிலைமையின் பின்னர் தேசிய பொருளாதாரத்தின் செயற்பாடு, பொருளாதார மீள்கட்டமைத்தல், அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை மற்றும் நிதிக் கொள்கைகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய அபிவிருத்திக் கருத்திட்டங்கள் உள்ளிட்ட பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக மிகவும் ஆழமாகக் கலந்துரையாடி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கடந்த வாரம் ஜனாதிபதி தலைமையில் 11 உறுப்பினர்கள் அடங்கிய பொருளாதார சபையை நியமித்திருந்தார், இதற்கு உதவி புரியும் வகையிலேயே இவ்வாரம் ஆலோசனை குழுவொன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.