உங்களின் தடுப்பூசி விபரத்தை பெறுவதெப்படி? அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய முறைமை.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஏப்ரல் 30ஆம் திகதிக்கு பின்னர் பொது இடங்களுக்கு பிரவேசிப்போர் கொரோனா தடுப்பூசியை முழுமையாக பெற்றிருக்க வேண்டியது அவசியம் என அரசாங்கம் முன்னதாக தெரிவித்திருந்தது.

அதற்கமைய, தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களை அடையாளம் காண்பதற்காகவும், ஒருவர் தடுப்பூசிகளை முழுமையாக செலுத்தியுள்ளாரா என்பதை அறிந்துகொள்வதற்காக அரசாங்கம் புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

VAC என டைப் செய்து இடைவெளி விட்டு உங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை ஆங்கில எழுத்துடன் 1919 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் செய்தால் உங்களின் தடுப்பூசி விபரத்தை பெறலாம்..

உதாரணம்- VAC 123456789V 👉1919…

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.