புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீட்டு திகதி தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு

5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 2 வாரங்களில் வெளியாகும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வழமையாக வருடத்தின் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை, கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த வருடத்தில் பல முறை பிற்போடப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த பரீட்சை கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், இப்பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் கடந்த ஜனவரி 31ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு பெப்ரவரி 5ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தது.

இந்தநிலையில் எதிர்வரும் சில நாட்களில் குறித்த பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முறை இடம்பெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 340, 508 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில், 2,943 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.