லிட்ரோ எரிவாயு நிறுவனம் பொதுமக்களிடம் விடுத்துள்ள விசேட கோரிக்கை.

சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிடவும் அதிக விலைக்கு ‘லிட்ரோ கேஸ்’ விற்பனை செய்யப்படுமானால் அது தொடர்பில் முறைப்பாடு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமையாளர் சாரங்க விஜேசிங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

1311 என்ற இலக்கத்துக்கு தொடர்பை ஏற்படுத்தி இது தொடர்பில் முறையிட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், லிட்ரோ எரிவாயு விநியோக முகவர்கள் ஆறு பேர் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிடவும் அதிக விலைக்கு லிட்ரோ கேஸினை விற்பனை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அதிக விலைக்கு கேஸ் விற்பனை செய்யும் முகவர்களின் அனுமதி பத்திரம் இரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.