பெற்றோல் வாங்க வரிசையில் நின்ற மற்றுமொரு நபர் மரணம்.

பெற்றோல் வாங்குவதற்காக வரிசையில் நின்ற மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடவத்தை நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் எரிபொருள் வாங்குவதற்காக வரிசையில் நின்ற 70 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக கண்டி வத்தேகம பிரதேசத்தில் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் நேற்று கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

எல்லேபொல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் வரிசையில் காத்திருந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வத்தேகம உடுதலவின்ன பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய மொஹமட் இலியாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நான்கு மணி நேரத்திற்கும் மேலாக மண்ணெண்ணெய் வரிசையில் காத்திருந்த அந்த நபர், மழையில் நனைந்ததால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.