உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தாலும், இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இன்று கப்பலிலிருந்து தரையிறக்கப்படுகின்ற எரிபொருளுக்கு 32 மில்லியன் டொலர் நிர்ணயிக்கப்பட்ட போதிலும், சிங்கப்பூர் விலையுடன் இன்று ஒப்பிடுகையில் அது 52 மில்லியன் டொலர் வரை அதிகரித்துள்ளதாக அவர் கூறுகின்றார்.
இதன்படி, ஒரு லீற்றர் டீசல் 81 ரூபா நட்டத்திலேயே விநியோகிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவினால் வழங்கப்படும் கடனுதவி கிடைத்தவுடன், எரிபொருளை தட்டுப்பாடின்றி இறக்குமதி செய்ய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.
எனினும், உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையினால், கொள்வனவு செய்யப்படும் எரிபொருள் அளவு குறைவடையும் சாத்தியம் உள்ளதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
Post a Comment