பூஸ்டர் தடுப்பூசியை பெறாதவர்களுக்கு சுகாதார அமைச்சின் அறிவிப்பு

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் கொவிட்-19 செயலூக்கி (பூஸ்டர்) பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு மீண்டும் பொது மக்களுக்கு அறிவிப்பு விடுத்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் பொது இடங்களில் முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டையை கைவசம் வைத்திருத்தல் அவசியமாகும்.

இதன்காரணமாக அதற்கு முன்னர் செயலூக்கி தடுப்பூசியை பெற்று முழுமையான தடுப்பூசியை பெற்ற அட்டையை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் நேற்றைய நாளில் 30, 381 பேருக்கு, பைஃஸர் செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டதாக, தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை, 73 இலட்சத்து 6, 152ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம், நேற்றைய தினம் 2, 593 பேருக்கு பைஃஸர் முதலாம் தடுப்பூசியும், 6,281 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் 786 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 2,071 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாகத் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.