சகல பாடசாலைகளும் நாளை மீள ஆரம்பம் - கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட சுற்றறிக்கை.

அரச மற்றும்‌ அரச அனுமதி பெற்ற தனியார்‌ பாடசாலைகளை 2022 கல்வி ஆண்டுக்காக மீண்டும்‌ நாளை (07) திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

2021 க.பொ.த (உயர்தர) பரீட்சைகளுக்காகபெப்ரவரி 07 - மார்ச் 07 வரை அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, 2021 க.பொ.த (உயர்தர) பரீட்சையின்‌ பின்பு நாளை (07) முதல் மீண்டும்‌ பாடசாலைகளை ஆரம்பிப்பதற்குத்‌ தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சீ பெரேராவினால் தற்போது விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைய,

மாணவர்‌ எண்ணிக்கைக்கிணங்க மாணவர்களை அழைக்கவேண்டியதோடு, பாடசாலைக்கு. அழைக்கப்படாத மாணவர்‌ குழுக்களுக்கு மாற்றுக்‌ கல்வி முறைகளைப்‌ பயன்படுத்தி உரிய பாடவிதானங்கள்‌ நடாத்தப்பட வேண்டும்

மேலும்‌ கல்வி மற்றும்‌ கல்விசாரா பணிக்குழுவினர்‌ வழமைபோன்று சேவைக்குச்‌ சமூகமளிக்க வேண்டும்.

அத்துடன் வகுப்பிலுள்ள மாணவர்‌ தொகைக்கு ஏற்ப வகுப்புகள்‌ நடத்தப்பட வேண்டிய விதமும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
20 மாணவர்கள்‌ கொண்ட வகுப்புகள் எல்லா நாட்களும்‌ இடம்பெறும்‌.
21 - 40 மாணவர்கள்‌ கொண்ட வகுப்பிலுள்ள மாணவர்கள்‌ இரு குழுக்களாகப்‌ பிரிக்கப்பட்டு வாரம்‌ விட்டு வாரம்‌ வகுப்புகள் இடம்பெறும்‌.
40 இற்கும்‌ அதிகமான மாணவர்கள்‌ கொண்ட வகுப்புகளிலுள்ள மாணவர்களை மூன்று சம குழுக்களாகப்‌ பிரித்து வகுப்புகள் இடம்பெறும்

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சீ பெரேராவினால் விடுக்கப்பட்டுள்ள குறித்த சுற்றறிக்கை வருமாறு...

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.