எாிபொருள் நெருக்கடி தீரும் நாள் குறித்து வலுசக்தி அமைச்சரின் அறிவிப்பு

புத்தாண்டுக்கு பின்னர் எரிபொருள் பிரச்சினை குறைவடையும் என தாம் எதிர்ப்பார்ப்பதாக வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, மக்கள் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் செயற்பாடு எதிர்வரும் புத்தாண்டுக்கு பின்னர் முடிவுக்கு கொண்டுவரப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான வளம் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கான மேலதிக ஆய்வுகள் இடம்பெறுகின்றன.

மேலும் ஒரு வருடத்திற்குள் நாட்டில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எரிபொருள் மற்றும் எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்கு நாடளாவிய ரீதியில் மக்கள் இன்றும் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.