நாளை மின்துண்டிப்பு அமுலாகும் விதம் தொடர்பான புதிய நேர அட்டவணை வெளியானது.

நாளைய தினம் 13 மணித்தியாலங்களுக்கு மின்துண்டிப்பை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, A,B,C,D,E,F ஆகிய வலயங்களில் நாளை (31) அதிகாலை 3 முதல் 6 மணிவரை 3 மணித்தியாலங்களும், நண்பகல் 12 மணிமுதல் மாலை 4 மணிவரை 4 மணித்தியாலங்களும், மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை 6 மணித்தியாலங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

G,H,I,J,K,L ஆகிய வலயங்களில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணிவரை 3 மணித்தியாலங்களும், காலை 8 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை 4 மணித்தியாலங்களும், மாலை 4 மணிமுதல் இரவு 10 மணிவரை 6 மணித்தியாலங்களும், மின் துண்டிப்பு அமுலாகவுள்ளது.

அவ்வாறே, P,Q,R,S ஆகிய வலயங்களில் அதிகாலை 3 மணிமுதல் காலை 6 மணிவரை 3 மணித்தியாலங்களும், நண்பகல் 12 முதல் மாலை 4 மணிவரை 4 மணித்தியாலங்களும், மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 வரை 6 மணித்தியாலங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

T,U,V,W ஆகிய வலயங்களுக்கு நள்ளிரவு 12 மணிமுதல் அதிகாலை 3 மணிவரை 3 மணித்தியாலங்களும், காலை 8 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை 4 மணித்தியாலங்களும், மாலை 4 மணிமுதல் இரவு 10 மணிவரை 6 மணித்தியாலங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களுக்கு அதிகாலை 5.30 முதல் காலை 9 மணிவரை 3 மணிநேரமும் 30 நிமிடங்களும், மாலை 4 மணிமுதல் மாலை 6 மணிவரை 2 மணித்தியாலங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

மின் துண்டிப்பு அமுலாகும் புதிய நேர அட்டவணைக்கு கிளிக் செய்யவும்

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.