உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் S.ஜெய்சங்கர், கொழும்பிலுள்ள லங்கா IOC நிறுவனத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
லங்கா IOC நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா, தனக்கு எரிபொருள் விநியோகம் தொடர்பில் தெளிவூட்டியதாக S.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்புகளின் போது இலங்கையின் பொருளாதாரம், நிதியுதவி, இரு நாட்டு நல்லுறவு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment