எரிபொருள் தட்டுப்பாடை தீர்க்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்.

2022.03.01 தொடக்கம் 2022.10.31 வரையான (08) மாதகாலத்திற்கான டீசல் (உயர்ந்தபட்ச சல்பர் 0.05) இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குவதற்காக பதிவு செய்யப்பட்டுள்ள விநியோகத்தர்களிடம் விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளது.

குறித்த பெறுகையை கொரல் எனேர்ஜி DMCC நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள விசேட நிரந்தரப் பெறுகைக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த பெறுகையை வழங்குவதற்காக எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அத்துடன் 2022.06.01 தொடக்கம் 2022.12.31 வரையான (07) ஏழு மாதகாலப்பகுதிக்கான மசகு எண்ணெய் இறக்குமதிக்கான பெறுகைக் கோரலுக்கான நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குவதற்காக விலைமுறிகள் கோரப்பட்டுள்ளது.

குறித்த பெறுகையை ஐக்கிய அரபு இராச்சியத்தின் கொரல் எனேர்ஜி DMCC கம்பனிக்கு வழங்குவதற்கு அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அப்பரிந்துரைகளின் பிரகாரம் குறித்த பெறுகையை அக்கம்பனிக்கு வழங்குவதற்காக எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்) 

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.