மற்றுமொரு இராஜாங்க அமைச்சர் இராஜினாமா!

தான் பதவி விலகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர அறிவித்துள்ளார்.

களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், இயந்திரப் படகுகள் மற்றும் கப்பல் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக அவர் பதவி வகிந்திருந்தார்.

இந்நிலையில், நேற்று முதல் அமுலாகும் வகையில் குறித்த பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாகவும், தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளராகவும் ஜயந்த சமரவீர செயற்பட்டு வருகின்றார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ மற்றும் பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்க ஜனாதிபதி அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.