எரிபொருள் பௌசர் உரிமையாளர்கள் சங்கத்தின் தீர்மானத்தில் மாற்றம்.

நாடளாவிய ரீதியில் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகளில் இருந்து விலகியிருந்த இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளது.

அமைச்சர் காமினி லொக்குகேவுடன் இடம்பெற்ற சுமுகமான கலந்துரையாடலை அடுத்து போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்தது.

2 நாட்களுக்கு முன்னர் போக்குவரத்து கட்டணத்தை 60% அதிகரிக்குமாறு கோரி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு கடிதம் ஒன்றை குறித்த சங்கத்தினர் அனுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், டீசல் விலை அதிகரிப்பை மாத்திரம் குறித்த கட்டண அதிகரிப்பின்போது கருத்திற்கொள்வதாக தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அமெரிக்க டொலர் பெறுமதி அதிகரிப்பையும் கருத்தில் கொண்டு தங்களுடைய கட்டணத்தையும் திருத்தியமைக்குமாறு தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

எனினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அந்தக் கோரிக்கைக்கு இணங்கியிருக்கவில்லை.

அதனை தொடர்ந்து தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் சேவையில் இருந்து விலகி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது.

இலங்கையின் எரிபொருள் போக்குவரத்தில் 80% தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.