எரிபொருள் நெருக்கடி; பிரதமர் விடுத்துள்ள விசேட அறிவுறுத்தல்.

எரிபொருளை சேமிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் இருந்தே தமது கடமைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் மற்றும் பிரதமரின் கீழ் உள்ள அமைச்சுக்களின் அதிகாரிகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், இடைக்கிடையில் மின்சாரம் தடைப்படுகின்ற போதிலும், அதிகாரிகள் தங்களால் இயன்றளவு சேவைகளை செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த நெருக்கடியினால் மக்கள் படும் இன்னல்களை அரசாங்கம் என்ற வகையில் நாம் உணர்ந்து கொண்டு, இதனை தீர்ப்பதற்கான வழிமுறைகளை முன்னெடுத்து வருவதாகவும் பிரதமர் தனது முகப்புத்தக பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.