துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 2 ஆயிரம் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நிதியமைச்சு மற்றும் வர்த்தக அமைச்சினால் இதற்கான நிதி வழங்கப்படவுள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள பொருட்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அரிசி, சீனி , பெரிய வெங்காயம், மிளகாய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 2 ஆயிரம் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை இந்திய கடனுதவியின் கீழ் இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
Post a Comment