எரிவாயு பிரச்சினையை விரைவில் தீர்ப்பது தொடர்பில் அரசாங்கம் முன்னொடுக்கவுள்ள நடவடிக்கை.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு பிரச்சினையை விரைவில் தீர்ப்பது தொடர்பில் மத்திய வங்கியுடன் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார்.

நாட்டை வந்தடைந்துள்ள எரிவாயுவை கப்பலில் இருந்து தரையிறக்குவதற்கான நாணய கடிதங்களை திறந்து கட்டணங்களை செலுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய களஞ்சியசாலையில் எரிவாயு நிறைவடைந்தமையை அடுத்து எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்துவதாக லிட்ரோ நிறுவனம் இன்று முற்பகல் அறிவித்தது.

டொலர் பற்றாக்குறை காரணமாக நாணய கடிதங்கள் விடுவிக்கப்படாமையினால் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள எரிவாயு அடங்கிய கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

குறித்த கப்பலில் 3,500 மெட்ரிக் டன் எரிவாயு உள்ளதோடு அது 3 நாட்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் எரிவாயுவை விடுவிக்க முடியாமையால் நாளாந்தம் 15, 000 டொலர் தாமதக் கட்டணம் செலுத்த நேரிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.