ஜெனரேட்டர் வெடித்ததில் பெண்ணும் அவரது இரு குழந்தைகளும் படுகாயம் - வெலிமடை பகுதியில் சம்பவம்.

வெலிமடை கெப்பிட்டிபொல பிரதேசத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த பகுதியில் அமுல்படுத்தப்பட்ட மின்வெட்டு காரணமாக குறித்த பெண்ணும் அவரது பிள்ளைகளும் மின்பிறப்பாக்கியை (ஜெனரேட்டர்) இயக்க முற்பட்டுள்ளனர்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்பிறப்பாக்கியில் மின்சாரம் கிடைக்காததால், பாதிக்கப்பட்டவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி மின்பிறப்பாக்கியை ஆய்வு செய்தனர்.

இதன்போது பெட்ரோல் வால்வுக்குள் தீப்பொறி விழுந்ததால், குறித்த மின்பிறப்பாக்கி வெடித்துள்ளது. இதன்போது குறித்த பெண்ணும் அவரது இரண்டு குழந்தைகளும் படுகாயமடைந்துள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.