சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிப்பு!

எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் 2022 ஜூன் 30 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செலுப்படியாகும் காலம் மேலும் 6 மாதங்களால் நீடிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கம் தெரிவித்துள்ளது.

அவ்வாறே, எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் 2022 செப்டெம்பர் 30 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செலுப்படியாகும் காலம் மேலும் 3 மாதங்களால் நீடிக்கப்படவுள்ளதாக அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கான மூலப்பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அட்டைகளுக்கு பதிலாக தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.