கொழும்பில் தீ விபத்து : 23 வீடுகள் முற்றாக நாசம்!

இன்று (25) அதிகாலை கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பேர்கியுசன் வீதி பகுதியிலுள்ள கஜிமா வத்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 தற்காலிக சேரி வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த தோட்டத்தில் 200 இற்கும் அதிக தகரத்திலான வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவத்தில் அவற்றில் 23 வீடுகள் முற்றாக எரிந்து நாசமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீயை அணைக்க 5 தீயணப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, பிரதேசவாசிகளின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த வருடம் மார்ச் 15ஆம் திகதி குறித்த பகுதியில் இவ்வாறானதொரு தீ விபத்து அப்பகுதியில் ஏற்பட்டிருந்ததோடு, அதில் சுமார் 50 வீடுகள் தீக்கிரையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.