சகல அரச நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை.

மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதற்கமைய அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் வேண்டுகோளின் பேரில் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறித்த அமைச்சின் செயலாளர் ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

அதன்படி, குளிரூட்டிகள் மற்றும் தேவையற்ற விளக்குகள் நிறுவனங்களின் பயன்பாட்டை முடிந்தவரை குறைக்குமாறு அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு எரிபொருளை பயன்படுத்த வேண்டாம் என அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகளுக்கு வெளிமாவட்டங்களிலிருந்து அதிகாரிகளை கொழும்புக்கு வரவழைப்பதற்காக அரசாங்க வாகனங்களைப் பயன்படுத்துவது ஏற்கனவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரத்னசிறி மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.