நுவரெலியா விடுதி அறையில் கணவன் மனைவி சடலமாக மீட்பு - நடந்தது என்ன...? (படங்கள்)

நுவரெலியா விடுதி அறையொன்றில் தங்கியிருந்த கணவன் மனைவி சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குருணாகல், கொக்கரல்ல பகுதியிலிருந்து உல்லாசப் பிரயாணிகளாக நுவரெலியாவிற்கு வருகை தந்த ஆண் (59) ஒருவரும் பெண் (57) ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

நேற்றையதினம் (26) குருணகல் பகுதியில் இருந்து ஒரு குழுவினர் தங்களுடைய விடுமுறையை கழிப்பதற்காக நுவரலியாவிற்கு வருகை தந்து நுவரெலியாவிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர்.

இதன்போது இவர்கள் தங்களுடைய இரவு உணவுத் தேவைக்காக பயன்படுத்திய 'பாபிகியுவ்' (Barbecue) இயந்திரத்தை குளிரிலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக அறைக்குள் வைத்து நித்திரைக்கு சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த இயந்திரத்தில் இருந்து வெளியேறிய நச்சு வாயு காரணமாக இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இவர்களுடைய சடலம் இன்றையதினம் (27) நுவரெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை இடம் பெற்றதன் பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்ட இருப்பதாக நுவரெலிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இதே போன்றதொரு சம்பவம் நுவரெலியாவில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.