திறைசேரி செயலாளருடன் இந்திய பறக்கிறார் அமைச்சர் பஸில்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

அதற்கமைய எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று (25) இந்த விஜயத்தை இருவரும் மேற்கொள்ளவுள்ளனர்.

நிதியமைச்சர் இதற்கு முன்னரும் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

2.4 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி, இந்தியாவிடமிருந்து நாட்டுக்கு பெற்றுக் கொள்வதற்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அண்மையில் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.