பாரியளவில் மின்சாரத்தை பயன்படுத்தும் வர்த்தகர்களுக்கான மின்சார விநியோகத்தை துண்டிப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இவ்வாறான வர்த்தகர்கள் தங்களின் மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்தி தேவையான மின்சாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க குறிப்பிட்டார்.
மின்சார பாவனை தொடர்பில் இலங்கை மின்சார சபைக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் நேற்று பரிந்துரைகள் சில வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
தற்போது ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் இந்த பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
Post a Comment