ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு! பரபரப்பாகும் ஐரோப்பிய நாடுகள் - உக்ரைன் தலைநகரில் வெடிப்பு சத்தங்கள்

உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டு இருந்தார்.

உக்ரைன் ராணுவம் தனது ஆயுதங்களை கீழே போட வேண்டும் எனவும் உக்ரைன் ராணுவத்தினர் தங்களது ஆயுதங்களை கீழே போட்டு விட்டு வீடுகளுக்கு திரும்பி செல்ல வேண்டும் என புதின் கூறியிருந்தார்

உக்ரைன் கிளர்ச்சியாளர்களின் கோரிக்கையை அடுத்து அங்கு ரஷ்ய படைகளை அனுப்ப ஜனாதிபதி புதின் உத்தரவிட்டநிலையில்,

கிழக்கு உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கையும் ரஷ்ய படைகள் தாக்க தொடங்கி உள்ளன. உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ்வில் குண்டு மழை பொழிய தொடங்கின ரஷ்ய ராணுவ படைகள்.

உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ், கிழக்கு உக்ரைனில் உள்ள டோனஸ்கை தாக்க தொடங்கியது ரஷ்யா. ஓடேசா, கார்கிவ், மைக்கோல், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷ்ய படைகள் தாக்கி வருகிறது.

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்யா தொடுத்துள்ள போரால் பேரழிவு ஏற்படும் என ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.