பொருட்களுக்கான தட்டுப்பாடு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட செய்தி

“அரிசி, சீனி உட்பட நுகர்வுப் பொருட்களுக்கு ஏற்பட்டிருந்த தட்டுப்பாடு மற்றும் பிரச்சினைகள் படிப்படியாக தீர்க்கப்பட்டுள்ளன. ஏனைய பிரச்சினைகளும் விரைவில் தீர்க்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.

அந்தவகையில் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்யக்கூடிய சூழ்நிலை உருவாகும் என்றும் குறிப்பிட்டார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் கோதுமை மா வழங்கும் திட்டம் நேற்று (20) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

“தமிழ், சிங்களப் புத்தாண்டு காலப்பகுதியில் தட்டுப்பாடின்றி மக்களுக்கு நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கான சூழலை உருவாக்குவதற்காக நிதி அமைச்சர் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டது.

அந்த குழு வாராந்தம் கூடி நிலைமைகளை சீர்செய்து வருகின்றது. கடந்த காலங்களில் இருந்த முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. அரிசி, சீனி மற்றும் சமையல் எரிவாயுவுக்கு இருந்த தட்டுப்பாட்டு நிலை சரி செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.