விசேட நடவடிக்கை: வாகன சாரதிகளுக்கு காவல்துறையின் அறிவிப்பு

நாட்டில் ஏற்படும் வீதி விபத்துக்களை குறைப்பதற்கு எதிர்வரும் சில மாதங்களில் விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நாட்டில் கடந்த வருடம் 22 ஆயிரம் வீதி விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

குறித்த விபத்துக்களில் 2 ஆயிரத்து 470 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 14 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நாட்டில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் நாளொன்றில் சுமார் 60 விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, குடிபோதையில்வாகனம் செலுத்துபவர்களை அடையாளம் காண புதிய உபகரணமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.